Latest News

March 24, 2014

இலங்கைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசின் சட்ட முன்னகர்வு: ஐ.நாவின் அனைத்துலக தீர்ப்பாயத் தலைவர் களப்பணியில்! ஜெனீவாவில் ஊடகவியலாளார் மாநாடு!
by admin - 0

அனைத்துலக சட்டங்களின்
முன்  இலங்கையை நிறுத்தும்
நடவடிக்கையாக,
சியராலியோனில் நடந்த
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நாவினால்
விசாரணைக்கு அமைக்கப்பட்ட அனைத்துலக
தீர்ப்பாயத்தின் முன்னாள் தலைவரும், பிரபல
அனைத்துலக சட்டவாளருமான Geoffrey
Robertson QC அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் களத்தில் இறக்கியுள்ளது. அரசியலமைப்பு, குற்றவியல் மற்றும்
ஊடகவியல் சட்டங்களில் உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்றவரும், இவற்றில் மைல்கற்களாக கொள்ளப்படும் பல வழக்குகளின் ஆலோசகரும், பிரிவி கவுன்சில் (Privy
Council), ஸ்ராஸ்பேர்க் (Strasbourg)  நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய
மனிதவுரிமை நீதிமன்றம் போன்றவற்றில் பல
வழக்குகளில் பங்கெடுத்தவருமாக அவர்கள்
விளங்குகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர்களை பணிக்கு அமர்த்தியிருந்த
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக சட்டங்களின்
முன் இலங்கையை நிறுத்துவதற்கான
முன்னெடுப்புக்களை இரகசியமாக முன்னெடுத்திருந்த நிலையில்,
தற்போது இதனை ஊடகங்களுக்கு அறிவித்து இது தொடர்பில் ஜெனீவாவின் (PressClub)
ஊடகக் கூடத்தில் அனைத்துலக ஊடகங்களின்கவனத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு ஊடக
மாநாடு ஒன்றினை செவ்வாயன்று (25-03-2014)ஏற்பாடு செய்துள்ளது. http://us4.forward-to-friend.com/forward/
showu=15619c2f2d033dd353575d696&id=c13a இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சட்டவாளர் Geoffrey Robertson QCஅவர்கள் பங்கெடுப்பதோடு, அமெரிக்க
சட்டவாளாருமான Mr Ali Beydoun அவர்களும் பங்கெடுக்கின்றார். கூடவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்களும் பங்கெடுக்கின்றார். தமிழ் மக்களிற்கும் தமிழர் தேசத்திற்கும் எதிராக முள்ளிவாய்க்காலுக்கு முன்னரும்
பின்னரும் இலங்கை அரசுகள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள், மனிதநேயத்திற்கெதிரான
குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மிகத் தீவிரமாகப் பாடுபடும் என்பதோடு, தமிழீழத் தாயகத்தின் மீதான இராணுவ அடக்குமுறைக்குள் நடத்தப்படும்
கட்டமைப்பு ரீதியான
இனப்படுகொலையை தடுத்து நிறுத்தவும்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாடுபடும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments