Latest News

March 29, 2014

நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி கோயில் கொடியேற்றத்திருவிழா.
by admin - 0

ழத்திருநாட்டின் இரதயமாக விளங்குவது யாழ்ப்பாணம். இப்பூண்ணிய பூமியில் இற்றைக்கு இருநூற்றி ஜம்பது ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அற்புதமான திருக்கோவில் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி கோயில். தமிழர்பண்பாட்டில் முருகவழிபாடு என்பது தனித்துவமானது. மிக நீண்ட வரலாறு கொண்டது. பழம் பெரும் கிராமமாகிய நீர்வேலிக் கிராமம் முற்றுமுழுதாக முருகவழிபாட்டுக்கு முதன்மை கொடுத்த கிராமம். இக்கிராமத்து பாரம்பரிய வரலாற்றில் முக்கிய அம்சமாக பொது மக்களின் நாமங்கள் கந்தபுராணத்தை மையமாகக்கொண்டே சூட்டப்பட்ட உண்மையை யாவரும் அறிவர். பண்டிதர்கள், பாவலர்கள், கலைஞர்கள், வாழ்ந்த புண்ணிய பூமி நீர்வளம், நிலவளம் நிறைந்த செல்வம் மலிந்த பூமி. இத்திருவூரில் மூர்த்திதலம் தீர்த்தம் முறையே அமைந்த திருக்கோவில் நீர்வேலி கந்தசுவாமி கோயில்.இந்த புகழ்மிக்க எமது நீர்வைக்கந்தனில் கொடியேற்றத்திருவிழா இன்றையதினம் பக்திபூர்வமாக நடைபெற்றது.

(திருவிழா படங்கள்  தயாபரன் ,சசி மாஸ்டர் இருவருக்கும் மிக்க நன்றிகள் )










நன்றி ஈழம் றஞ்சன் 
« PREV
NEXT »