Latest News

March 08, 2014

வவுனியாவிலிருந்து வந்த பஸ் பயணிகள் மீது கிளிநொச்சியில் சிங்கள இனவாதிகள் மிகமோசமான தாக்குதல்!
by admin - 0

வவுனியாவிலிருந்து யாழ். நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணம் செய்த பயணிகள் நேற்று இரவு இனந்தெரியாதவர்களினால் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இரணைமடு பகுதியில் உணவகத்தில் உணவிற்காக பேருந்து நிறுத்தப்பட்டிருந்த வேளை யாழிலிருந்து சென்ற "கப்" ரக வாகனம் ஒன்றில் சென்ற ஐந்து பேர் கொண்ட குழுவினர் அங்கிருந்த பயணிகளை சிங்களத்தால் திட்டியுள்ளனர்.

அனைவரையும் சுடப் போவதாக மிரட்டியதோடு தமிழ் இனத்தையும் தமிழீழ விடுதலை புலிகளையும் சொல்லத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

அப்போது அங்கிருந்த எம்.பி.எஸ்.எல் வங்கி அதிகாரி நாகேந்திரம் புஸ்பவசந்தன் என்பவர் அதைத் தட்டிக்கேட்டார். அதன் போது அவரை "கப்" வாகனத்திற்கு இழுத்துச் சென்று கடுமையாகத் தாக்கியதோடு அக் குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பிரபாகரனோடு சேர்த்து தமிழர்கள் எல்லோரையும் கொன்றிருக்கவேண்டும்

2ம் இணைப்பு

இனவெறியோடு நெல்லியடி எம்பிஎஸ்எல் வங்கியின் காப்புறுதி பகுதி முகாமையாளர் மீது கிளிநொச்சியில் சிங்கள இனவாதிகள் மிகமோசமான தாக்குதல்

வவுனியாவிலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த நெல்லிய எம்பிஎஸ்எல் வங்கியின் காப்புறுதி முகாமையாளர் நாகேந்திரன் புஸ்பகாந்தன் மீது கிளிநொச்சியில் வைத்து மதுபோதையில் வந்த சிங்கள இனவெறியாளர் குழு தாக்குதல் நடத்தியுள்ளது.

கிளிநொச்சி இரணைமடு சந்தியில் உள்ள உணவகத்தில் மாலை உணவுக்காக வவுனியாவில் இருந்து வந்து பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் இறங்கிய போது அந்த வேகமாக NW ks 5334 கப் ரக வாகனம் அங்கு கடையின் முன்னால் வழமையாக மாலையில் எரிக்கப்படும் கண்ணூறு நெருப்பின் மீது நிறுத்தப்பட்டது.

இதை கண்ட பேருந்தில் பயணித்த தமிழ் இளைஞர்கள் ரயரில் நெருப்பு பற்றப் போகிறது. மிகவும் நாகரிகத்துடன் தெரிவித்தனர். இதன் கப் வாகனத்தை சற்று தள்ளி நகர்த்தி நிறுத்திவிட்டு இறங்கிய சிங்கள நபர்கள் மதுபோதையில் தள்ளாடியபடி அங்குநின்ற தமிழர்களை பார்த்து மிகவும் கீழ்த்தரமாக சிங்களத்தில் தூஸணத்தில் பேசினர்.

அம்மாவை சகோதரிகளை இழுத்து அந்த சிங்கள நபர்கள் பேசினர்.

பிரபாகரனோடு சேர்த்து உங்களையும் கொன்றிருக்க வேண்டுமென இனவெறியுடன் பேசினர். இந்த நிலையில் மிகவும் உச்சநிலையில் இனவாத்தை மதுபோதையில்  NW ks  5334 கப் வாகனத்தில் வந்த சிங்களவர்கள் பேசிய நிலையில் அங்கு நின்ற பலரும் மிகவும் விசனத்துக்கும் சங்கடங்களுக்கும் உள்ளாகினர்.

அப்பொழுது அங்கு நெல்லியடி எம்பிஎஸ்எல் வங்கியின் காப்புறுதி பகுதி முகாமையாளர் நாகேந்திரன் புஸ்பகாந்தன் அவர்களிடம் மிகவும் நாகரிகமாக இவ்வாறு தமிழர்களை கொச்சைப்படுத்தி ஏன் பேசுகின்றீர்கள் என்று கேட்டபோது அவர்களில் ஒருவர் முகாமையாளர் மீது தாக்குதலை நடத்தினhர்.

இதன் பிறகு முகாமையாளர் புஸ்பவசந்தனும் தன்னை காத்துக்கொள்ள போராடிய போதும் மதுபோதையிலும் இனவெறியிலும் இருந்த அந்த சிங்களவர்கள் குOவாக சேர்ந்து மிகமோசமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.



இதன் பிறகு வங்கி முகாமையாளர் பேருந்தில் ஏறிய பின்பும் அவரை இழுத்து வெளியில் விழுத்தி இழுத்துச் சென்று தங்கள் கப் வாகனத்தில் தள்ளி அவரை சுடப் போவதாகவும் தங்களிடம் துப்பாக்கி இருப்பதாகவும் அங்கு நின்றவர்களிடம் மிரட்டியுள்ளனர்.

ஒருவாறு அவர்களிடம் இருந்து தப்பிய வங்கி முகாமையாளர் புஸபவசந்தன் வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். தமிழர்கள் சகோதரர்கள் என எத்தனை நாடகங்களை அரசாங்கம் அரங்கேற்றினாலும் இப்படி பல இடங்களில் அவர்களின் சுயகுணம் இனவெறி வெளிப்பட்டுவிடும் என்பதையே இந்த சம்பவமும் காட்டிநிற்கின்றது.

இப்படியான சம்பவங்களே அன்று தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டது என்பதை சிங்கள சமுகம் மறக்கக்கூடாது.

மிகவும் சிங்களவர்களால் இரத்த வெறியாடப்பட்ட வெப்பியாரத்தில் இருக்கும் தமிழ்ச் சமுகம் மீது இப்படியான இனவெறியை வெளிப்படுத்தும் சமபவங்கள் எதிர்வினைகளையே ஏற்படுத்தும் என்பது கடந்த காலவரலாறு.
« PREV
NEXT »

No comments