யாழிலிருந்து
கிளிநொச்சி நோக்கி குறித்த பேருந்து பயணித்துக்
கொண்டிருந்ததாகவும். பளை பிரதேச செயலகத்தை
அண்மித்த வேளையில் அங்கு காணப்பட்ட மஞ்சள்
கடவையில் பாடசாலை மாணவர் ஒருவா்
கடக்க முற்பட்ட வேளையில் குறித்த பஸ் சாரதி
பேருந்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றதாகவும்
கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வர இயலாத நிலையில்
மாணவன் பயணித்த துவிச்சக்கர வண்டியை
மோதியதுடன் அருகில் உள்ள தேநீர்
கடை மற்றும் புடவைக்கடை ஆகியவற்றை
உடைத்து பேருந்து கடைகளுக்குள் உள் நுழைந்ததாகவும் கட்டிடம்
மேல்மாடி என்பதால், மேல்மாடியின் மேல் கட்டிடம் இடிந்து
பேருந்தின்மீது விழுந்ததாகவும் தெரிவிக்கின்றன.
குறித்த
விபத்தில் திவாகர், மற்றும் கிளிநொச்சி மாகவித்தியாலய
ஆசிரியர் ஒருவரும் அதீ தீவிர சிகிச்சை
பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வீதியை கடக்க முற்பட்ட
மாணவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.
போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 6 பேர் படுகாயங்கட்கு உள்ளாகியுள்ளமை
தெரிய வருகின்றது.
இவ்விபத்தில்
மாணவரின் துவிச்சக்கர வண்டி சேதமாகியுள்ளதுடன், பேருந்தும்
பலத்த சேதமாகியுளள்ளமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து பளைப்பிரதேச
பொலிஸ் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்
கொண்டு வருகின்றானர்.
No comments
Post a Comment