இனம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டதை அடுத்து 5 காட்சிகளை நீக்கியுள்ளனர். சந்தோஷ்சிவன் தயாரித்து இயக்கியுள்ள ‘இனம்' படத்தினை திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி வெளியிட்டுள்ளார். இலங்கை போராட்ட பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவான ‘இனம்' திரைப்படம் வெள்ளிக்கிழமை ரிலீஸானது. இந்தப் படத்தில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை சிதைக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் படத்தை தடை செய்ய வலியுறுத்தினர். இந்நிலையில் படம் வெள்ளிக்கிழமை ரிலீஸானது. தொடர்ந்து எதிர்ப்பு எழுந்ததால் படத்தில் 3 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி கூறியதாவது:
புண்படுத்த மாட்டோம்.
சில இடங்களில் படத்தை வெள்ளிக் கிழமை திரையிடுவதில் தடங்கள் ஏற்பட்டது. படத்தை எல்லா தரப்பு மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். யாருடைய மனதையும் புண்படுத்தும் விதமாக எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை
புத்தபிக்கு காட்சி
‘இனம்' படத்தில் ஒரு இடத்தில் புத்தபிக்கு அன்பை வெளிப்படுத்தும் விதமாக அந்த வழியே வரும் நாயகி மற்றும் குழந்தைகளுக்கு மாதுளம்பழம் கொடுக்கும் காட்சியும், எல்டிடிஈ தொடர்பான காட்சியும் நீக்கப்பட்டன
3 நிமிட காட்சிகள் நீக்கம்
3 நிமிட காட்சிகள் நீக்கம்
மொத்தம் 3 நிமிட காட்சிகளை வெள்ளிக்கிழமை இரவுக் காட்சி முதல் நீக்கியுள்ளோம் என்று லிங்குசாமி கூறியுள்ளார்.
வசனம் நீக்கம்
வசனம் நீக்கம்
தலைவர் கொல்லப்பட்டார் என்ற ஒரு காட்சியின் வசனமும், படத்தின் இறுதியில் காட்டப்படும் கார்டில் 38,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்ற தகவலும் நீக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள்தான் சர்ச்சைக்குரிய காட்சிகளாக கூறப்பட்டது. அதை நீக்கி வெளியிட்டுள்ளனர்.
Social Buttons