யாழ். மாவட்டத்தில் தென்னைப் பயிர் செய்கையில் பொது மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்ற போதிலும், தென்னையில் பரவும் "மையிற்' Mites எனப்படும் நோய்த் தாக்கம் காரணமாக போதிய பயனைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக வாழ்வெழுச்சித் திட்டத்தின் (திவிநெகும) கீழ் தென்னம் கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு பொதுமக்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.எனினும் கூட தரமான நாற்றுக்களில் இருந்து பெறப்பட்ட தென்னங்கன்றாக இருந்தாலும் வளர்ந்து காய்க்கும் நிலையில் மையிற் நோயின் தாக்கத்துக்கு உள்ளாகி காய்கள் பெரியளவில் வளர்ச்சி யடையாததால் போதிய பயன் கிடைக்காத நிலையும் காணப்படுகின்றது.
மையிற் நோயின் தாக்கம் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக யாழ். மாவட்டத்தில் தென்னைகளை தாக்கி வருகின்ற போதிலும் உரிய முறையில் அதிலிருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகள் தென்னை அபிவிருத்தி சபையால் மேற்கொள்ளப்பட வில்லை என்ற குற்றச் சாட்டுக்களும் எழுகின்றன. குறித்த நோயின் தாக்கம் ஏற்பட்ட ஆரம்பத்தில் தென்னை மரங்களுக்கு உள்ளிக் கரைசல், சவர்க்காரத் தண்ணீர் மற்றும் மருந்து வகைகளை விசிற அறிவுரைகள் கூறப் பட்டபோதிலும் அது வெற்றியளிக்காத நிலையில் கைவிடப்பட்டது. எனவே இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து வட மாகாண விவசாய அமைச்சர் தென்னையில் பரவும் மையிற் நோயைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும் என்று பொதுமக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட் டுள்ளது.
Social Buttons