Latest News

March 02, 2014

கோபிதாஸின் மரணத்தைக் கண்டித்து வடமராட்சியில் இன்று ஆர்ப்பாட்டம்: உடல் இன்று நல்லடக்கம்
by admin - 0

புதிய மகசின் சிறைச்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த கோபிதாஸின் மரணத்தைக் கண்டித்தும் இம் மரணம் தொடர்பில் நீதி விசாரணைகள் மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியும் இன்று காலை வடமராட்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் பொதுமக்களும் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24ஆம் திகதி புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள "சி" விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்ற பிரித்தானியப் பிரஜாவுரிமை பெற்ற கோபிதாஸின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வடமராட்சியில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டு இன்றைய தினம் நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில் இவருடைய மரணத்தைக் கண்டித்து நீதிகோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments