இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர்களான ரூக்கி பெர்னாண்டோ, அருட்தந்தை பிரவீன் ஆகிய இருவரும் கிளிநொச்சியில் வைத்து நேற்று ஞாயிறு இரவு பயங்கரவாத புலனாய்வுத்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமை வழக்கறிஞர் எஸ் ரத்னவேல் தெரிவித்தார்.
இத்தகவலை பிபிசி வெளியிட்டுள்ளது.
இவர்களை கைது செய்துள்ளதன் காரணம் கிளிநொச்சியில் அண்மையில் கைது செய்யப்பட்ட தாயும் மகளும் விவகாரத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என நம்புகின்றோம்.
இவர்கள் இருவரும் கிளிநொச்சி காவல்துறை நிலையத்தில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. எனினும் இவர்கள் இருவரும் 24 மணித்தியாலங்களுக்குள் விடுவிக்கப்படாவிடில் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று நம்பலாம்.
அதேவேளை இவர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமையினால் நாம் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாது.
இவர்கள் இருவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டால் குறைந்தது 3 மாத காலத்திற்கு தடுத்து வைத்திருக்கமுடியும்.
எனினும் தெளிவான விபரங்கள் எதுவும் அறியமுடியாதுள்ள நிலையில் இவர்களை விடுவிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது என மனித உரிமை வழக்கறிஞர் ரத்னவேல் மேலும் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது
மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களை கொழும்பிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
முன்னணி மனித உரிமைச் செயற்பாட்டாளர் ருகி பெர்னாண்டோ மற்றும் கத்தோலிக்க மதகுரு ஒருவர் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரவீன் மதகுருவும் தாமும் தனித் தனியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ருகி பெர்னாண்டே நண்பர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.
முதலில் இவ்வாறு எவரையும் கைது செய்யவில்லை என கிளிநொச்சி பொலிஸார் சட்டத்தரணிகளிடம் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இருவரை கைது செய்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
Social Buttons