Latest News

March 03, 2014

மாமனிதர் மருத்துவர் சத்தியமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு
by admin - 0

மாமனிதர் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை லண்டனில் நடைபெற்றது.
தென்மேற்கு லண்டன் குறொய்டன் பகுதியிலுள்ள லான் பிறாங் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரை வெண்புறா தொண்டர் ரட்ணசபாபதி ஏற்றி வைக்க, பிரித்தானியக் கொடியை மற்றொரு தொண்டர் மருத்துவர் நிலானி நக்கீரன், தமிழீழ தேசியக் கொடியை மற்றொரு தொண்டர் உதயணன் ஆகியோரும், ஈகச்சுடரை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மேற்கு பிரதேச பொறுப்பாளர் நவமும் ஏற்றி வைத்தனர்.

மாமனிதரின் திருவுருவப் படத்திற்கான மலர்மாலையை அவரது புதல்வர் மருத்துவர் இளங்கோ சத்தியமூர்த்தி, மற்றும் கவிதா சத்தியமூர்த்தி ஆகியோர் அணிவிக்க, தொடர்ந்து மனைவி மற்றும் பொதுமக்கள் மலர் வணக்கத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து ரூற்றிங் நகரசபை உறுப்பினர் றெக்ஸ் ஒக்ஸ்போர்ன், வெண்புறா தொண்டர் துஸ்யா திலீபன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் கந்தையா ராஜமனோகரன் ஆகியோரது உரைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

















நன்றி ஈழம்ரஞ்சன் 
« PREV
NEXT »

No comments