Latest News

March 09, 2014

மொரீஸியஸின் நிலைப்பாட்டுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி காரணம் – செல்வராஜா கஜேந்திரன்
by admin - 0

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் முன்வைத்துள்ள பிரேரணையை அந்த இரு நாடுகளுடன் சேர்ந்து முனமொழிந்த மற்றொரு நாடு மொரீஸியஸ். மொரீஸியஸின் இந்த நிலை மாற்றத்திற்கு தங்களது செயற்பாடு காரணம் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் கூறியிருக்கின்றார். இன்று (07) இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ளார். அமெரிக்கா தற்போது முன்வைத்துள்ள பிரேரணையின் வடிவத்தை எமது கட்சி ஏற்கவில்லை. எனினும் இலங்கை தொடர்பான மெரீஸியஸ் நாட்டின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார் என அந்த இணையத்தளச் செய்தி தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் தங்களது நாட்டிற்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் கொண்டுவரும் பிரேரணையை மொரீஸியஸும் சேர்ந்து முன்னெடுக்கின்றமை தொடர்பில் இலங்கை அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது என்றும் அதில் கூறப்படுகின்றது.
« PREV
NEXT »

No comments