வடக்கில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் வடமாகாண சபையில் கண்டனப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
ஆளும்கட்சி உறுப்பினர்கள் மட்டுமே இந்த கண்டனப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில், ஜெயக்குமாரியின் விடுதலை, வடக்கில் இராணுவ வெளியேற்றம், சிறைகளில் உள்ள உடன்பிறப்புக்களை விடுதலை செய், சினிமா பாணியில் சிறைப்பிடிப்பதை உடனே நிறுத்து,
மகனை கேட்டால் பூசாவா? அண்ணனை கேட்டால் அநாதை இல்லமா?, சிறுமியை சிறைப்பிடித்து எம் இனத்தை சீண்டாதே, இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம், கடந்த வாரம் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களின் விடுதலை போன்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
Social Buttons