Latest News

March 27, 2014

அரசாங்கத்திற்கு ஆதரவாக பேச புலனாய்வு பிரிவினர் பயிற்சி கொடுத்தனர் -டொக்டர். வரதராஜா
by Unknown - 0

ஐந்து வருடங்களுக்குப் பின்னர் வைத்திய கலாநிதி துரைராஜா வரதராஜா, இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

வைத்திய கலாநிதி துரைராஜா வரதராஜா வித்தியாசமாக கதையினைக் கூறியுள்ளதாக சனல் 4 தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

போருக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் போர் நடைபெற்ற பிரதேசத்தில் பணியாற்றிய வைத்தியர்கள் கலந்து கொண்டனர்.

போர் நடைபெற்ற பிரதேசத்தில் சிக்கியிருந்த பொதுமக்கள் தொடர்பான தகவல்களை இவர்கள் உலகத்திற்கு வழங்கியிருந்தனர். ஆனால், அரசாங்கம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கியிருந்தனர்.
அவ்வைத்திசாலைகள் மீது அரசாங்கம் செல் தாக்குதல் நடத்தவில்லையென்றும், ஒரு சில பொதுமக்களே கொல்லப்பட்டதாகவும் படையினருக்கு எதிரான போர்க்குற்றங்கள் அனைத்தும் பொய்யானது என்றும் வைத்தியர்கள் கூறியிருந்தனர்.
இவ்வைத்தியர்கள் அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், தற்போது மிகவும் வித்தியாசமான முறையில், தனது கருத்துக்களைத் வைத்தியர் வரதராஜா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மிக மோசமான முறையில் வைத்தியசாலைகள் மீது செல் தாக்குதல்களை நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான உதவிகளை எல்லாம் அரசாங்கம் நிறுத்தியிருந்தது. வைத்தியாசலைகளுக்கு மருந்துப் பொருட்களை அனுப்புவதையும் அரசாங்கம் நிராகரித்தது. உணவுப் பொருட்களைக் கூட அனுப்பவில்லை வரதராஜன் சனல் 4வுக்கு தெரிவித்துள்ளார்.
குருதி, மருந்து, நோயெதிர்ப்பு மருந்துகள் இல்லாமையால் போரில் காயமடைந்த பல உயிர்களைக் காப்பாற்ற முடியாமல் போனது.
காயமடைந்தவர்களுக்கு அவர்களுடைய இரத்தமே திரும்பச் செலுத்தப்பட்டது. போதுமான இரத்தம் கையிருப்பில் இருக்கவில்லை.
இரண்டு கால்களையும் இழந்த நிலையில் 60 வயதான ஒருவர் சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகள் எம்மிடம் இல்லாத காரணத்தினால் ஒரளவு வலி நிவாரணி ஊசி மருந்துகளை செலுத்தினோம். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார்.
தினமும் குழந்தைகள், பெரியவர்கள் என இறப்புக்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன.
அரசாங்கம் நடத்திய ஊடக சந்திப்பானது, புலனாய்வப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த சந்திப்பில் எப்படியான தகவல்களை வழங்க வேண்டுமென பயிற்சியளிக்கப்பட்டது.
நாங்கள் அப்போது தடுப்புக்காவலில் இருந்ததால் புலனாய்வுப் பிரிவினர் கூறுவதைப் போலவே செயற்பட வேண்டியிருந்தது.
போர்க்களத்தில் இருக்கும் போது தகவல்களை வெளியிட்டதால் ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவும் கோபத்தில் இருந்தனர்.

« PREV
NEXT »