ஐ.நா மனித உரிமைச்சபையினை மையமாக கொண்டு தமிழர்களுக்கான பரிகார நீதி (Remedial Justice For Tamils) எனும் ஆவணக்கையேடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஅழிப்புத் தடுப்பும் விசாரணை முயற்சிகளுக்குமான மையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
மதச்சிறுபான்மையினருக்கு இடையிணான விவகாரமாகவும், ஒட்டுமொத்த சிறிங்காவின் மனித உரிiமீறல்களாகவும், இலங்கை இனநெருக்கடி விவகாரத்தினை அனைத்துலகம் வியாக்கியானம் செய்து வரும் நிலையில், தமிழர்கள் என்ற இனத்தின் அடிப்படையிலேயே அத்தனை மீறல்களும் நடந்தேறுகின்றன என்பதனை இக்கையேடு வலியுறுத்தி நிற்கின்றது.
முள்ளிவாய்காலும் ,அதற்கு பின்னரான சூழலையும் விவரித்துள்ள இக்ககையேடு, 45 பக்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.
பல்வேறு துறைசார் நிபுணர்களின் பங்கெடுப்பில் உருவாகியுள்ள இக்கையேட்டினை மின்னிதழாகவும் குறித்த http://fr.calameo.com/read/001215636e3a415b9a90a இந்த இணையத் தொடுப்பில் காணவும் தரவிறக்கமும் செய்துகொள்ள முடியும்.
இதேவேளை பிரித்தானியா பிரான்சு கனடா ஆகிய நாடுகளிலும் இக்கையேடு அச்சுப்பிரதியாக வெளியிடப்படுகின்றது.
பிரித்தானியா : வரும் ( 06/03/2014) வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு The Chambers /Harrow Civic Centre /Station Road /Harrow, HA1 2XF இடத்தில்.
பிரான்சு : வரும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு St Denis 8 பல்கலைக்கழகத்தின் D002 இலக்க அறையிலும் வெளியிடும் கருத்துப் பரிமாற்றமும் இடம்பெறுகின்றன.
No comments
Post a Comment