Latest News

March 27, 2014

அமெரிக்கப் பிரேரணை அதிகப்படியான வாக்குகளால் வெற்றி!
by Unknown - 0

நடுநிலமை வகிப்பேன் எனக் கூறிய இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்கப் பிரேரணையின் பத்தாவது பந்தியை நீக்க வாக்களித்தது. ஆனாலும் அந்தப் பிரேரணை படு தோல்வியடைந்துள்ளது.
மூன்று சுற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. அதன் பின்னர் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகள், எதிராக 12 நாடுகள், நடுநிலையாக 12 நாடுகள் என வாக்குகள் கிடைத்ததுடன், இலங்கை மீதான பிரேரணை வெற்றியடைந்துள்ளது..
11 மேலதிக வாக்குகளினால் தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கைக் எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் 11 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், எதிராக 12 நாடுகள் வாக்களித்துள்ளன.
இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
இலங்கைக்கு ஆதரவாக சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் தோல்வி
இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தானினால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக பாகிஸ்தான் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்திருந்தது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தீர்மானத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என வலியுறுத்தி பாகிஸ்தான் தீர்மானம் சமர்ப்பித்திருந்தது.
எனினும், இந்த தீர்மானம் தோல்வியைத் தழுவியுள்ளது.
தீர்மானத்திற்கு எதிராக 23 நாடுகள் வாக்களித்ததுடன் ஆதரவாக 14 நாடுகள் மட்டுமே வாக்களித்திருந்தன.
பத்து நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.






« PREV
NEXT »