Latest News

March 22, 2014

கிளிநொச்சியைச் சேர்ந்த குறித்த இளைஞரை மன்னார் வங்காலைப்பாட்டு கிராமத்தில் வைத்து கடற்படையினர் கைது
by admin - 0


கடந்த சில நாள்களாக வன்னியில் நிலவிய இராணுவச்சோதனைகள் நேற்று முதல் யாழ்ப்பாணத்துக்கும் பரவின. நேற்றிரவு குடாநாட்டின் பல பகுதிகளிலும் வழக்கத்துக்கு மாறாக படையினரின் வீதி ரோந்து நடவடிக்கைகள் அதிகரித்திருந்தன.
சைக்கிள்களிலும், கால்நடையாகவும் மாத்திரமன்றி சில இடங்களில் இராணுவ ஜீப்களிலும் படையினர் தீவிர ரோந்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் இரவு நேரத்தில்  வீதிகளில் பயணிப்போரை மறித்து அடையாள அட்டைகளையும் பரிசீலித்தனர்.
வாகனங்கள் தொடர்பான விபரங்களும் படையினரால் பதியப்பட்டன. இதனால் வன்னியில் நிலவிய பதற்றமான -போர்க்காலம் போன்ற  சூழல்- நிலைமை யாழ்ப்பாணத்திலும் பரவி, தொடரப்போகின்றதோ எனப் பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை வன்னியில் நேற்றும் பதற்றமான சூழ்நிலையே நிலவியது.பல பகுதிகளில்  படையினர் வீடு வீடாகச் சென்று அங்கிருந்தவர்களின் அடையாள அட்டைகளைச் சோதனை செய்தனர்.
மன்னாரில் கடற்தொழிலில் ஈடுபட்டு வந்த கிளிநொச்சி இளைஞர் கடற்படையால் கைது
மன்னார் வங்காலைப்பாடு பகுதியில் கடல் தொழிலில் ஈடுபட்டு வந்த கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கடற்படையினர் இன்று(21)கைது செய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இளைஞர் சிறுத்தோப்பு கிராமத்தில் தங்கி இருந்து வங்காலைப்பாட்டில் கடல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகின்றது.
தற்போது மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சோதனைகளும், தேடுதல்களும் இடம் பெற்றும் வரும் நிலையிலே குறித்த இளைஞர் கிளிநொச்சி கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்த காரணத்தினாலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
தற்போது குறித்த இளைஞர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,
கிளிநொச்சியைச் சேர்ந்த குறித்த இளைஞரை மன்னார் வங்காலைப்பாட்டு கிராமத்தில் வைத்து கடற்படையினர் கைது செய்து இன்று(21) தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
எங்களின் விசாரணைகளின் பின் நாளை சனிக்கிழமை (22) மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் என அவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »