Latest News

March 15, 2014

இன அழிப்புத் தொடர்பில் சுதந்திரமான விசாரணை முன்னெடுக்க வேண்டும்: ஜெனிவாவில் அனந்தி உரை
by admin - 0

இலங்கையில் 60 ஆண்டுகாலமாக இடம்பெற்றுவரும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டுமென வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 25ம் கூட்டத்தொடரில் உரையாற்றினார்.
தனது உரையின் பொழுது, கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் சுதந்திரமான விசாரணையினை ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
47 வயது நிரம்பிய மூன்று பிள்ளைகளின் தாயாரான இவர் பொது விவாதத்தில் மேலும் கூறியதாவது,
பிள்ளைகள் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவ்வதிர்வுகளிலிருந்து வெளிவருவதற்கு வாழ் நாள் முழுவதும் அவர்கள் போராட வேண்டியுள்ளது.
ஈழத்தில் வாழ்ந்த பிள்ளைகள் போரின் பொழுது தொடர்ச்சியான இனப்படுகொலைகளிற்கே முகங்கொடுத்தனர் ஆகையால் உறுதியான முடிவொன்றினை எடுப்பதன் மூலமாக இப்பிள்ளைகள் நிரந்தர இனபடுகொலைகளிற்கு முகங்கொடுப்பதனை தவிர்க்கலாம்.
இன்று நான் இங்கே கதைத்துக்கொண்டிருக்கின்றேன். தற்சமயம் இலங்கை இராணுவத்தினர் 13 வயது சிறுமியான விபூஷிக்கா பாலேந்திரனை, அதாவது தன்னுடைய சகோதரனின் விடுதலையிற்காக கண்ணீருடன் போராடிய இச்சிறுமியை கைது செய்துள்ளனர்.
இவ்வாறான ஓர் நிலையினையே ஒவ்வோர் பிள்ளைகளும் எதிர்நோக்குகின்றனர் என கூறினார்.
அனந்தி சசிதரனின் உரை,
https://link.brightcove.com/services/player/bcpid1722935254001/?bctid=3339869135001&autoStart=false&secureConnections=true&width=480&height=270
எந்தவொரு போரினாலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அந்தப் பாதிப்பிலிருந்து மீள வாழ்நாளைக் கழிக்க வேண்டும். ஆனால், தமிழீழத்தைச் சேர்ந்த குழந்தைகள் இன அழிப்பினை தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டும்.
நான் இங்கு அரச சார்பற்ற குரலாக மட்டும் பேச வரவில்லை.. தந்தையைத் தேடும் மூன்று பெண் பிள்ளைகளின் தாய்.
அரசியல் தலைவராக எனது கணவர் எழிலன், இறுதிக்கட்டப் போரின் போது எங்கள் கண் முன்னால் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தார்.
ஐந்து வருடங்கள் கழிந்து விட்டன. இலங்கை அரசாங்கம் எங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. என்னைப்போல ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களுடைய அன்புக்குரியவர்களை இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
நான் இங்கு தற்போது பேசிக் கொண்டிருக்கும்போது, இலங்கை இராணுவம் இன்று விபூசிகா பாலேந்திரன் என்ற 13 வயது சிறுமியை கைது செய்துள்ளனர்.  அச்சிறுமி ஒவ்வொரு போராட்டத்திலும் கலந்து கொண்டு தனது சகோதரர்களைக் தேடித் தருமாறு அழுகின்றார்.
அவர் தற்போது கைது செய்யப்பட்டயைானது வெளிப்படையான அச்சுறுத்தலாக உள்ளது.
ஐந்து பொதுமக்களுக்கு ஆயுதம் தரித்த ஒரு இராணுவம் என நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் வாழ்க்கையினைக் கட்டுப்படுத்துவதாக இராணுவத்தினர் உள்ளனர்.
வீட்டுகள் மற்றும் பாடசாலைகளைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினர் தமிழ்ப்பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்ததுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
சிறுவர்கள் வேலை செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இராணுவத்தினர் பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.
கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் சுதந்திரமான விசாரணையினை ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments