Latest News

February 18, 2014

பிரித்தானியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நா.க.த.அரசாங்கம்
by admin - 0

வெள்ளத்தினால் பாதிப்புக்கு உள்ளாகிய பிரித்தானிய மக்களுக்கு, தமிழர்கள் தங்களின் தோழமையினைத் தெரிவித்து நிவாரணங்களை வழங்கி வருகின்றனர்.


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியப் பிரதிநிதிகள் கடந்த 14ம் தேதியில் இருந்து உலர் உணவுகள் மற்றும் குடிநீர்களை சேகரித்து வருவதோடு, பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினரான திரு கரத் தோமஸ் அவர்களைச் சந்தித்து சேகரித்த ஒரு தொகுதி உலர் உணவுகளை வழங்கியிருந்தார்கள்.

Preston Road, Wembley ல் அமைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அலுவலகத்தில் தமிழ் மக்கள் நேரடியாக வந்து தமது உதவிகளை வழங்கியிருந்தார்கள்.
பிரித்தானியாவில் பல பகுதிகளிலும் நேரடியாகச்சென்று தமிழ் மக்களிடமிருந்து நிவாரணப் பொருட்களை, நா.தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் சேகரித்து வருவதோடு, இந்த நிவாரண உதவிகளை அந்தந்தப் பகுதி பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களினூடாகவே வழங்கியும் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பின்வரும் பகுதிகளில் தமிழ் மக்களுடன் இணைந்து நா.தமிழீழ அரசாங்கப்பிரதிநிதிகள் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார்கள்.
North West London: Harrow, Wembley, Hayes and Southall areas.
North East London: Walthamstow, Ilford and Eastham areas.
South West London: Tooting and Croydon areas.
Wales: Swansea and Port Talbort areas
North East England: Coventry, Milton Keynes and Birmingham areas.
மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் ,நகரசபைகளுடனும் நா.தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தொடர்பினை மேற்கொண்டு தமிழ் மக்களது தோழமையினைத் தெரிவித்துள்ளார்கள்.
« PREV
NEXT »

No comments