அவுஸ்ரேலியாவில் அகதி அந்தஸ்துகோரி படகுமூலம் சென்றவர்களை அங்கிருந்து திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அந்த அரசாங்கத்தைக் கோரவுள்ளதாக வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று வடமாகாண சபை அமர்வின் பின்னர் ஊடகங்களைச் சந்தித்து கலந்துரையாடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்களாகியும் இன்னும் தமிழ் மக்களிற்கான நிரந்தரத் தீர்வு வழங்கப்படவில்லை. இன்றும் இங்கு மக்கள் தங்கள் வாழ்வை அச்சத்திலேயே கழிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
இதனால் இங்கு வாழும் இளைஞர், யுவதிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடல்வழியாக அவுஸ்ரேலியாவிற்கு செல்கின்றார். இவ்வாறானவர்களை திருப்பி அனுப்ப அவுஸ்ரேலியா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இவ்வாறு வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளவர்களை திருப்பி அனுப்பவதை சர்வதேச நாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு அனுப்பப்பட்டும் இளைஞர், யுவதிக்கு ஆபத்துக்கள் உள்ளன என்பதை அவுஸ்ரேலியா தூதரகம் ஊடாக அந்நாட்டு அரசாங்கத்திற்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக அவர் தெரிவித்தார்
No comments
Post a Comment