Latest News

February 15, 2014

கணவனைப் பிடித்த இராணுவத்தைக் காட்டுவேன்! அடித்துக் கூறுகிறார் மருத்துவப் பொறுப்பாளர் மனைவி
by admin - 0

யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பமான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைக்கு சாட்சியமளிக்க வருகைதந்த குடும்பப்பெண்னொருவர் தனது கணவரை இராணுவ உயர் அதிகாரியிடம் கையளித்ததாகவும் அவரை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் கூறியிருந்தார்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளரின்(ரேகன்) மனைவி என்று தன்னை அடையாளப்படுத்திய பெண்னே மேற்கண்டவாறு ஐனாதிபதி ஆணைக்குழுவிடம் இன்று சாட்சியம் அளித்துள்ளார்.
எனது கணவரை என் கையாலே இரரணுவத்தினரிடம் ஒப்படைத்தேன். நான் கணவரை ஒப்படைத்த இராணவ உயர்அதிகாரியை என்னால்; அடையாளம் காட்ட முடியும். எனது கணவரை தற்போதும் இராணவப் புலனாய்வுத் துறையினர் வைத்திருப்பதாக அறிகின்றேன். ஆகவே அவரை மீட்பதற்கு இந்த ஆணைக்குழு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பில் ஐனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று வெள்ளிக்கிழமை காலை கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் ரேகனின் மனைவி; மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி வட்டுவாகலில் வைத்து தமிமீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைய வேண்டுமென்றும் அவ்வாறு சரணடையபவர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்றும் இராணவத்தினர் ஒலி பெருக்கி மூலம் அறிவித்தனர்.இதனையடுத்த புலிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தளபதிகள் பலரும் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இதன் போது என்னுடைய கணவரும் சரணடைந்தார். அவருடன் மருத்தவர்களான மனோஜ் மற்றும் சிவபாலம் ஆகிய இருவரும் சரணடைந்திருந்தனர் என்றும் அந்த குடும்ப பெண் சாட்சியமளித்துள்ளார்.
thulasika_jaffna_001 
« PREV
NEXT »

No comments