மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி 20 ஆவது தடவையாக இன்று திங்கட்கிழமை (10-02-2014) தோண்டப்பட்ட போது மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த 31 ஆம் திகதி குறித்த அகழ்வுப்பணிகள் இடை நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இன்று திங்கட்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ன தலைமையில் அகழ்வுப்பணிகள் இடம் பெற்றது.
இதன் போது மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. இது வரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் தொகை 58 ஆக அதிகரித்துள்ளது.
கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளில் 28 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 3 மனித எலும்புக்கூடுகள் இன்று மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது வரை 31 எலும்புக்கூடுகள் பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் நாளை செவ்வாய்க்கிழமை குறித்த அகழ்வுப்பணிகள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments
Post a Comment