முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனையிலிருந்து தப்பிய சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மூவரையும் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அமைச்சரவை முடிவு குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ராஜிவ் கொலை குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளர் ஆகிய 3 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வேலூர் சிறையில் இருக்கும் நளினியும் விடுதலை செய்யப்பட உள்ளார். மேலும், ராபர்ட் பயஸ், ஜெயச்சந்திரன் ஆகியோரும் விடுவிக்கப்படுவார்கள் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இன்று அவசரமாக கூடிய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 110 விதியின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் இந்த முடிவுக்கு அடுத்த 3 நாட்களில் மத்திய அரசு பதில் அளிக்காவிட்டால், இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments
Post a Comment