Latest News

February 26, 2014

காணாமல் போன தானியங்கி இராணுவ விமானம் அதிர்ச்சியில் இலங்கை -
by admin - 0

வனாந்தரங்களில் இடம்பெறுக்கின்ற குற்றங்களை கண்டுப்பிடிப்பதற்காக கடந்த 23 ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்ட ஆளில்லா விமானம் ‘கேலமா’ இன்றுவரையிலும் திரும்பவில்லை என்று வனஜீவராசிகள் அமைச்சர் விஜித்த விஜய முனி சொய்சா தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற யுத்த காலத்தில் புலிகள் இருந்த வனாந்தரங்களுக்கு மேலே சென்று தரவுகளை திரட்டிவந்து இராணுவத்திற்கு வழங்கிய ஆளில்லா விமானமே ‘கேலமா’ இந்த செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த உளவு தானியங்கி விமானம் ஒரு கடத்தல் மற்றும் வன பாதுகாப்புக்கு இலங்கை பாவிப்பது கேள்விக்குரியதாக உள்ளது

உடவளவ வனாந்தரத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கண்டறிவதற்காக இந்த விமானம் வானத்திற்கு மேலாக ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்ட போதிலும் இதுவரையிலும் திரும்பவில்லை.


சிங்கபூர் பல்கலைக்கழகம்,கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகம் ஆகிய இணைந்து சுமார் 3 இலட்சம் ரூபா செலவில் உற்பத்தி செய்யப்பட்டது.

இந்த ஆளில்லா விமானம் வனாந்தரத்திற்குள் காணாமல் போகியிருக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தனர்.விடுதலைப்புலிகள் இலங்கை அரசின் இதுபோன்ற தானியங்கி விமானங்களை தமது கட்டுபாட்டில் கொண்டுவந்து வன்னியில் தரை இறக்கிய நிகழ்வுகள் முன்னர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது .
« PREV
NEXT »

No comments