Latest News

February 05, 2014

நாம் ஈழத்தவர் என்பதை உரக்க கூறிய லண்டன் போராட்டம், இலங்கை அரசின் யாப்பு எரிப்பு
by Unknown - 0

நேற்றைய தினம் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் நாடான ஸ்ரீலங்கா தனது 66வது சுதந்திர தினத்தை கொண்டாடியது ஆனால் தமிழர்களோ இதனை ஒரு கறுப்பு தினமாக அனுஷ்டித்தார்கள். தமிழீழத்திலும் ஆங்காங்கே கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டன. லண்டனில் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பால் இலங்கையின் உயர்ஸ்தானியர் காரியாலயத்துக்கு முன்னால் போராட்டம் நடத்தப்பட்டது.

எந்த ஒரு இலங்கை அரச அதிபரும் தமிழ் மக்களுக்கு சார்பாக நடந்து கொண்டதாக சரித்திரம் இல்லை மாறாக தமிழின அழிப்பை தான் முக்கிய தொழிலாக பார்த்து வந்துள்ளார்கள். இனவழிப்பின் உச்சகட்டம் தான் முள்ளிவாய்க்காள். இதற்கு பின்பும் நாம் அவர்களிடம் உரிமையை கேட்பது முட்டாள்தனம் ஆதலால் தான் போராட்டதினை பயன்படுத்தி இலங்கையிடம் கோரிக்கை வைக்காமல் மாறாக நாம் ஈழத்தமிழர் என்றும் இலங்கையரல்ல என்பதினை உரக்க கூறினார்கள். அதேபோல இலங்கை அரசின் யாப்பினை நடுவீதியில் வைத்து எரித்து அவர்களின் எதிர்ப்பினை காட்டினார்கள்.

அதேபோல பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் இளையோர் அமைப்பும் சேர்ந்து பிரித்தானிய பிரதமர் அவர்களின் வாசல்தளத்திற்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அங்கு பிரித்தானிய அரசு செய்த தவறினை திருத்தி கொள்ளவேண்டும், தமிழ் மக்களுக்கு உரிமையினை மறுபடியும் தரவேண்டும், தமிழீழத்துக்காண பொது வாக்கெடுப்பு என்று பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

20140205-131110.jpg

20140205-131132.jpg

20140205-131142.jpg

20140205-131212.jpg

20140205-131237.jpg

20140205-131244.jpg

20140205-131257.jpg

20140205-131303.jpg
« PREV
NEXT »

No comments