Latest News

February 03, 2014

எம்வி சன்சி கப்பலில் கனடா சென்ற இலங்கை அகதி நாடுகடத்தப்படும் அபாயம்
by admin - 0

எம்வி சன்சி கப்பலில் கனடா நாட்டிற்கு அகதியாக சென்ற அருமைத்துரை தர்மரத்தினம் என்பவர் பெப்ரவரி 11 அன்று இலங்கைக்கு நாடுகடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார்.

 2010 ஓகஸ் 13 இல் 492 அகதிகளுடன் தாய்லாந்து நாட்டிலிருந்து கனடாவிற்கு சென்ற அகதிகளில் ஒருவரான வல்வெட்டித்துறையை சேர்ந்த அருமைத்துரை தர்மரத்தினம் இதுவரை கனடா சிறையிலே இருக்கின்றார். இவரின் அகதி உரிமை  மறுக்கப்பட்ட நிலையில் நாடுகடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் அணியில் கடமைபுரிந்ததுடன் சிறிலங்கா கடற்படையுடன் மோதல்களின் ஈடுபட்டிருந்ததாகவும் இவர் கனடிய அரச உறுப்பினர்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.

 தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினை கனடா அரசாங்கம் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்களோ அல்லது உதவிபுரிந்தவர்களுக்கோ கனடிய அரசு அகதியுரிமை மறுக்கப்பட்டு வருகின்றது.
 
 இந்நிலையில் அருமைத்துரை தர்மரத்தினத்தின் இறுதித்தீர்ப்பு எதிர்வரும் 4 ஆம் திகதவெளிவரவுள்ளது. இதில் இவருக்கு பாதகமான சூழ்நிலையினை ஏற்படும் வகையில் தீர்ப்பு அமையுமென கனடிய வக்கீல்கள் தெரிவிக்கின்றனர்.

 இச்சந்தர்ப்பத்தில் இவர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டால் சிறிலங்கா அரசாங்கத்தினால் சித்திவதைக்குள்ளாக்கப்படும் நிலை ஏற்படும் என உறவினர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

 ஆனால் கனடிய சட்டவரையறைகளின் படி அகதி உரிமை மறுக்கப்பட்ட ஒருவர் தனது நாட்டிற்கு சென்றால் ஆபத்து நிகழலாம் எனும் பட்சத்தில் மனிதாபிமான அடிப்படையில் கனடாவில் தொடர்ந்து வாழும் உரிமை வழங்குவது கனடிய அரசின் வழமையாகும்.
 ஆனால் எம்.வி சன்சி கப்பலில் வருகை தந்த இவருக்கு  மிகவும் பாதகமான சூழ்நிலையினையே கனடிய அரசின் தீர்ப்புகள் தஎதிர்வரும் 4ஆம் திகதி இவரின் நிலை கேள்விகுறியா? அல்லது கனடிய அரசால் விடுலைசெய்யப்படுவாரா? என்ற நிலை உள்ளது.
இந்தச்செய்தியினை பார்க்கும் தமிழ் உறவுகள் நாடு கடத்துவதை நிறுத்துமாறு
கோரிக்கை விடுத்து (கீழே உள்ள இணையத்தளத்தினூடாக) இவரின் வாழ்வின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.
https://secure.avaaz.org/en/petition/The_Honourable_Prime_Minister_Stephen_Harper_the_Government_of_Canada_To_stop_the_deportation_of_Mr_Tharmaratnam_Arumait/

« PREV
NEXT »

No comments