காதலிக்கு திடீர் அதிர்ச்சி அளிப்பதாக
எண்ணிக் கொண்டு நிர்வாண கோலத்தில் சலவை இயந்திரத்துக்குள் ஒளிந்து கொண்ட
இளைஞர் ஒருவர், இறுதியில் அதிலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்ட
சம்பவம் அவுஸ்திரேலியாவின் வடக்கு மெல்போர்னில் இடம்பெற்றுள்ளது.
சலவை இயந்திரத்துக்குள் பலமாக சிக்கி கொண்ட நபரால் வரமுடியாததையடுத்து
அந்நாட்டு தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து
முகம் சுழித்தனர். இதையடுத்து விரைந்து வந்த பொலீஸார், அவரது உடல்
முழுவதும் ஒலிவ் எண்ணெயைத் தடவி, அந்த நபரை வெளியே கொண்டு வந்தனர்.
குறித்த நபர் வடக்கு மெல்போர்ன் நகரின் மூரோப்னா என்ற பகுதியைச்
சேர்ந்தவர். இவர் சனிக்கிழமையன்று தனது வீட்டில் தனிமையாக இருந்த போது
தன்னைத் தேடி வரும் காதலிக்கு திடீர் இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும்
என்று நினைத்து உடைகள் முழுவதையும் கழற்றி விட்டு நிர்வாண கோலத்தில் சலவை
இயந்திரத்துக்குள் ஒளிந்து கொண்டார்.
ஆனால் அவரை வெளியே கொண்டு வர முடியவில்லை. இதையடுத்து அவர் உடலில் ஒலிவ்
எண்ணையைப் பூசி மெதுவாக அவரை வெளியே இழுத்து மீட்டனர். சுமார் அரை மணி
நேரப் போராட்டத்துக்குப் பின்னர் அந்தக் நபர் மீட்கப்பட்டார்.
வெளியே வந்த அந்த நபர் பெரும் தர்மசங்கடத்துக்கும் அவமானத்துக்கும் உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோன்று அண்மையில் அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில், ஒரு 11 வயது
சிறுமி, வீட்டில் தனது சகோதரிகளுடன் ஒளிந்து விளையாடிய போது சலவை
இயந்திரத்துக்குள் ஒளிந்து மாட்டி மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment