Latest News

January 18, 2014

பிரபாகரனும் மீண்டும் வருவார்.-வைகோ
by admin - 0

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வருவார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வைகோ அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கலிங்கப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் அங்கு கூறியதாவது, 
 
இலங்கை தமிழர்கள் தங்கள் குழந்தைகளுடன் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். அந்த போருக்கு இலங்கைக்கு இந்தியா பெருமளவு உதவியது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும், வேலுநாச்சியாருக்கும் 19 ஒற்றுமைகள் உள்ளன. வேலுநாச்சியார் 8 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து, பின்னர் வெள்ளையரிடம் இருந்து சிவகங்கையை மீட்டார். 
 
அதே போல் பிரபாகரனும் மீண்டும் வருவார். ராஜபக்ஷ கூட்டத்திடம் இருந்து இலங்கையை மீட்பார். மக்கள் மன்றத்தில் ஒரு கூண்டில் ஈழத்தமிழர்களும், குற்றவாளி கூண்டில் அவர்களை கொல்ல ஏவிய கூட்டமும் நிற்கும். அந்த காலம் விரைவில் வரும்´ என்று வைகோ தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments