திருகோணமலை மாவட்டத்தின் தனித் தமிழ்க் கிராமமும் வடக்கு கிழக்கை இணைக்கும் பிரதேசமாகவும் காணப்படும் தென்னை மரவடிக் கிராமத்தை சிங்களமயமாக்கி அங்குள்ள மக்களை வெளியேற்றும் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராஜா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
தென்னைமரவடி மக்களின் அழைப்பையேற்று அங்கு விஜயத்தை மேற்கொண்டு தென்னை மரவடி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்த பின் அது பற்றி கருத்துத் தெரிவித்தபோதே ரவிகரன் இவ்வாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகை தென்னைமரவடிக் கிராமத்தை அநுராதபுர மாவட்டத்துடன் இணைத்து தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தை சிங்களமயமாக்கும் ஆரம்ப நடவடிக்கையாகவே இது கருதப்பட வேண்டும். ஏற்கனவே இக்கிராமம் திருமலை மாவட்டத்திலுள்ள குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது. இக்கிராமத்தை திருகோணமலை மாவட்டத்திலிருந்து பிரித்தெடுத்து அநுராதபுர மாவட்டத்துடன் இணைக்கும் ஒரு சூழ்ச்சியாகவே இது கருதப்பட வேண்டும்.
1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அளவில் தென்னைமரவடிக் கிராமத்தை சேர்ந்த சுமார் 350 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அயல் கிராமங்களின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றனர்.
சில குடும்பங்கள் 2013 ஆம் ஆண்டு மீளக்குடியேற்றப்பட்ட போதும் பல குடும்பங்கள் மீளக் குடியேற்றப்படுவதற்குரிய வசதிகள் செய்யப்படவில்லை. இந்நிலையில் சுமார் 200 க்கு மேற்பட்ட குடும்பங்கள் குடியேற வேண்டிய நிலையிலுள்ளன. இந்த சூழ்நிலையில் தான் தென்னைமரவடிக் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களும் காணிகளும் பேரின சமூகத்தால் கபளீகரம் செய்யப்படுவதுடன் குடியேற்றமும் செய்யப்படுகிறது.
அது மாத்திரமின்றி பாரம்பரியமாக தென்னைமரவடி மக்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த இடங்களில் பிற மாவட்டங்களிலிருந்து வந்து குடியேற்றப்பட்டவர்கள் தொழில் செய்து வருகின்றனர்.
1984ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் அங்குள்ள மக்கள் தமது வயல் நிலங்களில் விவசாயம் செய்து அறுவடை செய்ய குறுகிய காலம் இருந்த போது ஏற்பட்ட கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்கள் தற்போது மீளக்குடியேறியுள்ள நிலையில் அவர்களின் பூர்வீக நிலங்கள் பல பெரும்பான்மை சமூகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
சிறுகடல், வயல்நிலங்கள், தோட்டக் காணி கள் என அனைத்து வகை வாழ்வாதார வழிகளும் முடக்கப்பட்டு நுட்பமான முறையில் மக்கள் மேல் இடப்பெயர்வு அவசியநிலை திணிக்கப்பட்டு வருகின்றது.
ஊர்காவற்படையினரால் அபகரிக்கப்பட்ட 22 ஏக்கர் நிலத்தில் பயிர்ச்செய்கை இடம்பெறுகிறது. இது பற்றி உயர் அதிகாரிகள் பலருக்கு அறிவித்தும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று பிரதேச மக்கள் கூறுகிறார்கள்.
பனிக்கவயல்குளம் என்ற சிறியகுளம் சுமார் 45 ஏக்கர் நிலத்துக்கு விவசாயம் செய்ய உதவியது. ஆனால், தற்போது அக்குளத்தை மூடி அதை அபகரித்து விவசாயம் செய்கிறார்கள்.
கொல்லவெளி, பெருமாள்பிலவு, துவரமுரிப்பு, பனிக்கவயல், நல்லதண்ணி ஊத்துப்பிலவு ஆகிய பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டு வயல் செய்கிறார்கள்.
அப்பகுதியில் 240 ஏக்கர் வயல் நிலத்தில் 120 ஏக்கர் நிலப்பரப்புக்கான 1975 ஆம் ஆண்டு 60 பேருக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை தமிழ் மக்கள் இன்னமும் வைத்திருக்கிறார்கள்.அனுமதிப்பத்திரம் உள்ள காணிகளை இப்படி அத்துமீறி அபகரித் துள்ள செயல் சட்டவிரோதமாகும்.
அதுமட்டுமல்ல, தென்னமரவடிக்கு சொந்தமான ஆற்றுப்பகுதியில் 2 இடங்களில் படகு களுக்கான இறங்குதுறை அமைத்து, அதில் தொழில் செய்யும் சிங்கபுர கிராம பெரும்பான்மை மக்களுக்கு தொழில் உபகரணங்களை பாதுகாத்து வைப்பதற்குரிய அறைகள் அமைத்து வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது அத்துமீறிய செயலா கும்.
இது தவிர இன்னோரிடத்தில், சுமார் 20க்கு மேற்பட்ட ஓடங்களை கொண்டு வந்து சட்டவிரோதமான முறையில் படுப்பு வலைகளை பயன்படுத்தி தொழில் செய்கிறார்கள்.
தென்னமரவடிக் கிராமமூடாகவே பல சிங்களக் கிராமங்களுக்கு மின் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இக்கிராமத் திற்கு இன்னமும் மின்சாரம் வழங்கப்படவில்லை. அனைத்து வாழ்வா தார வழிகளை யும் முடக்கி, மக்களை இடம் பெயர வைக்கும் தந்திர நோக்கம் இங்கு செயற்படுத்தப்படு வது நன்றாக தெரிகிறது.
அதை விட உள்ளூர் மாட்டுத்தளமும் பறி போய்விட்டதால் மாடு மேய்க்கக் கூட முடியாத நிலையில் அப்பகுதி மக்கள் உள்ள னர்.
தென்னைமரவடிக் கிராமத்து மக்களை அப் பிரதேசத்தைவிட்டு கலைப்பதுடன் அப்பி ரதேசத்தை அநுராதபுர மாவட்டத்துடன் இணை க்கும் இந்த இனவாத நடவடிக்கைகளை கடு மையாக கண்டிப்பதுடன் வட கிழக்கு மக்கள் தென்னைமரவடி கிராமத்தின் மீட்சிக்காக போராட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
No comments
Post a Comment