Latest News

January 24, 2014

விஜய்காந்த்துடன் கூட்டணிக்காக அழகிரியை கட்சியை விட்டு நீக்கிய கருணாநிதி!
by Unknown - 0

திமுகவில் இருந்து மு.க. அழகிரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து திமுக- தேமுதிக கூட்டணி உறுதியாகும் எனத் தெரிகிறது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்ததில் திமுக கூட்டணியில் தேமுதிக இணணய வேண்டும் என்று கருணாநிதியும், ஸ்டாலினும் மறைமுகமாகவும், நேரடியாகவும் அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால் திமுக-தேமுதிக கூட்டணியை ரசிக்காத அழகிரி தன்னுடைய கருத்துக்களை கடுமையாக பதிவு செய்தார். அதற்கு கருணாநிதி உடனடியாக கண்டனம் தெரிவித்தார். அதோடு நிற்காமல் தேமுதிகவை எப்படியாவது திமுக கூட்டணியில் இழுக்க வேண்டும் என்பதற்காக அழகிரியை கட்சியில் இருந்தே நீக்கியுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புதிய தலைமுறை சேனலுக்கு பேட்டியளித்த அழகிரி, தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஒரு அரசியல்வாதியாகவே நான் மதிக்கவில்லை. அவரிடம் அரசியல் நாகரிகமே இல்லை. என்னுடைய தலைமையின் கீழ் இருந்தால், கூட்டணியில் இருப்பேன் என்று கூறுகிறார். அப்படிப்பட்டவரை திமுக கூட்டணியில் எப்படி சேர்ப்பது? டெல்லியில் 11 இடங்களில் போட்டியிட்டு வெறும் 2,000 ஓட்டுகள் வாங்கி இருக்கிறார். அவருடன் சேர்ந்தால் கூட்டணி எப்படி உருப்படும்? என்று கேட்டார்.

கருணாநிதி கண்டனம் 

இந்த கருத்து ஊடகங்களில் பரபரப்பாக வெளியானது. இந்த கருத்து எதிர்ப்பு தெரிவித்த கருணாநிதி, தேமுதிகவோடு தேர்தல் உறவு வேண்டாம் என்று மு.க. அழகிரி கூறியதாக ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்தச் செய்திக்கும், அல்லது அழகிரி அப்படி கூறியிருந்தால் அந்தக் கருத்துக்கும் திமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தார்.

திமுக தலைமைக்கே அதிகாரம் 

எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி சேருவது என்று தீர்மானிப்பது திமுக செயற்குழு, பொதுக் குழு அல்லது அந்தக் குழுக்களால் அதிகாரம் தரப்பட்ட திமுக தலைமை மட்டுமே. அந்த வகையில் தேமுதிகவுக்கும், திமுகவுக்கும் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சிதான் என்று திமுக தலைவர் என்ற முறையில் நான் சொன்ன கருத்துக்கு மாறாக மு.க.அழகிரி பேட்டி அமைந்திருப்பது வருந்தத்தக்கது மாத்திரமல்ல, கண்டிக்கத்தக்கதுமாகும்.

இதனை தொடர்ந்து அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் 
« PREV
NEXT »

No comments