Latest News

January 22, 2014

நடிகர் நாகேஸ்வரராவ் காலமானார்
by Unknown - 0

பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் உடல் நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் இன்று புதன் அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 91. கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார்.
1940 ஆம் ஆண்டு வெளியான தர்மபத்தினி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் நாகேஸ்வரராவ். அவர் கதாநாயகனாக நடித்து வெளியான தேவதாஸ் மிகப் பெரும் வெற்றி பெற்றது. அதில் இடம்பெற்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றன.
அவர் நடித்து அதிகம் பேசப்பட்ட இன்னொரு தமிழ்த் திரைப்படம், திமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான அண்ணா கதை வசனம் எழுதிய ஓர் இரவு.
தமிழ், தெலுங்கு உட்பட 250 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நாகேஸ்வர ராவ், மத்திய அரசின் மிக உயரிய விருதான பத்ம விபூஷன் மற்றும் திரைப்படத்துறை சாதனைகளுக்காக தாதா சாஹேப் பால்கே உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர்.
தமிழக அரசும் கலைமாமணி பட்டம் வழங்கி அவரை கௌரவித்தது. அவரது மகன் நாகார்ஜூனாவும் பிரபல திரைப்படக் கதாநாயகனாவார்.
முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பலர் நாகேஸ்வரராவ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர்.
« PREV
NEXT »

No comments