ஜில்லா படம் வெளிவருவதில் சிக்கல் ?
ஜில்லா படத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தவரை மர்ம கும்பல் ஒன்று தாக்கியுள்ளது. விஜய், காஜல் அகர்வால் நடித்துள்ள ஜில்லா படம் நாளை ரிலீஸாகிறது.
இந்நிலையில் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சவுமிதாஸ் ஸ்ரீ ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகி மகேந்திரன் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் மகேந்திரன் நேற்று இரவு தனது வழக்கறிஞரை சந்தித்துவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது விருகம்பாக்கம் குமரன் நகரில் பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவரின் காரை வழிமறித்தது. காரில் இருந்து இறங்கிய அவரை அந்த கும்பல் தாக்கியது. அவர் வலி தாங்க முடியாமல் அலறவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இதில் மகேந்திரனின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மகேந்திரன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் தலைவர் நடித்த படத்தை வெளியிடக் கூடாது என்று வழக்கு போடுறீயா?'' என்று கூறி 4 மர்ம நபர்கள் என்னை அடித்தனர். வலி தாங்க முடியாமல் நான் அலறியதால் அவர்கள் ஓடிவிட்டனர். என்னை தாக்கிய விஜய் ரசிகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். மகேந்திரன் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments
Post a Comment