வலி.தென்மேற்கில் செய்கை பண்ணப்ப ட்டுள்ள பெரும்போக பயிர்கள் கால்நடைக ளின் தீவனமாக மாறியுள்ளன. வயல்களில் மாடுகள் கட்டப்பட்டு மேய்ச்சல் நிலங்களா கக் காணப்பட்டுள்ளன.
உரிய காலங்களில் மழை பெய்யாததி னால் விவசாயிகளினால் கவனிக்கப்படாது விடப்பட்ட நெற்பயிர்களுடன் களை பெருமளவில் வளர்ந்துள்ளன. கடந்த மாதங்க ளில் தொடர்ச்து அதிக வெப்பத்தினால் நெற்பயிர்களின் முளைகள் கருகிப்போயின.
இதனால் விவசாயிகள் அவற்றை கால்நடைத் தீவனமாக மாற்றி கால்நடைகளை மேயவிட்டுள்ளதைக் காணக்கூடியதாகவுள் ளது.
வலி.தென்மேற்கில் உள்ள பெருமளவிலான வயல் நிலங்கள் தற்போது கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களாக்கப்பட்டுள்ளன.
மேற்படி காணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு (24 பரப்பு) மண்பண்படுத்தல், களைபிடுங்கு தல், விதைநெல், களைநாசினி, அடியுரம், உரம் மற்றும் வேறு செலவுகள் என ஆகக் குறைந்தது 21ஆயிரம் ரூபா வரை செலவு செய்தும் நெற்காணிகள் இறுதியாக இன்று கால்நடைத் தீவனமாக மாறியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பெரும்போகத்திற்கான மழை பொய்த்துப் போனமையினால் மழையை நம்பி நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் பெரும் நட்டத்தைச் சந்தித்துள்ளனர்.
இதற்கான இழப்பீட்டை வடமாகாண விவசாயத் திணைக்களம் வழங்குமா என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெரும் நட்டத்தைச் சந்தித்துள்ள தமக்கு இழப்பீடுகள் வழங்கப்படவேண்டும் என வலிகாமப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக் கின்றனர்.
No comments
Post a Comment