யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுன்கலைப்பீட நடனத்துறையில் பட்டம் பெறாத ஒருவர் செயல்முறை போதனாசிரியராகக் கடமையாற்றுவதாக மாணவர்களிடைய பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த 10ம் 11ம் திகதிகளில் இடம் பெற்ற யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத்தின் பட்டமளிப்பு நிகழ்வில் குறிப்பிட்ட போதனாசிரியருக்கு பட்டம் கிடைக்கும் என எதிர் பார்க்கப்பட்ட போதிலும் துணைப்பாடத்தில் சித்தியடையாமையால் குறிப்பி;ட்ட பட்டம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறிப்பிட்ட போதனாசிரியர் துணைப் பாடங்களில் சித்தியடையாத நிலமை காணப்பட்டதாகவும் இந்நிலையில் இறுதியாண்டிலும் கூட இந்நிலமை தொடர்ந்த நிலையிலும் போதனாசிரியராக விரிவுரையாளர்களின் செல்வாக்கின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச் சாட்டு;கள் எழுந்துள்ளதுடன் அனைத்துப் பாடங்களிலும் சித்தி அடைந்தும் உரிய தகுதி உள்ள மாணவிகள் போதனாசிரியர் பதவிக்கு நியமனம் செய்யப்படவில்லையென்பதும் மாணவர்களிடம் பலத்த குறையாகவும் விரக்தியாகவும் காணப்படுகின்றன.
இது சம்பந்தமாக நுன்கலைப்பீடத்தின் துணைத் தலைவர் ஒருவருடன் இது பற்றி கேட்ட போது கடந்த ஐந்தாண்டுகளாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் இத்தகையவர்களுக்கு நியமனம் துறைத்தலைவர் தனது தற்துணிபின் அடிப்படையில் வழங்கலாம் எனவும் உப பாடங்களில் சித்தி அடைவது பற்றியது பிரச்சனை அல்லவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறமை சாலி ஒருவரை புறம் தள்ளிவிட்டு கல்வியில் முழுமை பெறாத தகுதி அற்ற அல்லது துறைத் தலைவருக்கு வேண்டிய ஒருவரை நியமனம் செய்வது என்பது பற்றி கல்வியலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன் இத்தகைய நிலமை பல்கலைக்கழகத்தில் காணப்படுவதையிட்டு மனம் வெதும்புகின்றார்கள்.
யாழ்ப்பாணம் நுன்கலைப்பீடத்தில் பல துறைகளிலும் பட்டம் பெற்று மேலதிக பட்டங்களை இந்தியாவில் சென்ற பெற்ற வந்த பலர் ஏமாற்றத்துடன் வெளியில் காத்திருக்கக் கூடிய நிலையில் யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத் தெரிவு செய்து தன்னையும் குறைந்து இனத்தின் கல்வியையும் பாழடிக்கின்றது எனவும் பலரும் கேட்கின்றார்கள்.
No comments
Post a Comment