Latest News

January 10, 2014

கருணாவின் தலைமையில் தாக்குதல் மேற்கொண்டவர் 20 வருடங்களாக சிறைவாசம்: சிவாஜிலிங்கம்
by admin - 0

இராணுவ முகாம் மீதான
தாக்குதல் கருணாவினுடைய
தலைமையில் செய்யப்பட்ட
போது சிங்கராஜா என்ற அரசியல் கைதி 16 வயதில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று 36 வயது. 20 வருடங்களாக சிறைச்சாலையில் இருக்கிறார். ஆனால் கருணா வெளியில் இருக்கிறார். அவருக்கு- 35 வருட சிறைத் தண்டனை இன்னும் 20 ஆண்டு 56 வயது வரை சிறையில் இருக்கவேண்டும். இது கொடுமையிலும் கொடுமை. இன்று கே.பி. வெளியில் இருக்கிறார். கருணா வெளியில் இருக்கிறார். திருகோணமலை மாவட்ட பதுமன் வெளியில் இருக்கிறார். இது தொடர்பில் முதலமைச்சர் கூறியிருக்கிறார். எங்கள்
போன்றவர்களை கொல்லுவதற்காக
ஒரு குழு அமைக்கப்படுகிறது.
அதற்கு தலைமை தாங்கவுள்ளார்
என்று இப்படிப்பட்டவர்கள் வெளியில் இருக்கும்போது இந்த நிலை. இதுபோல் சைவக்குருக்களில் ஒருவர்
ரகுபதி சர்மா அவரும் மனைவியும் 20
வருடங்களாக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுடைய 3 குழந்தைகளும்
மட்டக்களப்பில் இருக்கக்கூடிய ஆச்சிரமத்தில் கண்ணீர் வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆகவே மரண தண்டனைக்கு ஆயுள்
தண்டனையாக மாற்றப்பட்டவர்கள் கூட சிறைத்தண்டனையாக்கி 14 வருடத்தில் வெளியில் வந்துள்ளார்கள். சிறைத் தண்டனை அனுபவித்துக்
கொண்டிருப்பவர்கள் வழக்கை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அத்தனை பேருக்கும்
பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென இந்த
சபையில் முன் மொழிகிறேன் என்றார். யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள
வடமாகாண சபையின் கட்டடத்தில்
நேற்றையதினம் நடைபெற்ற சபையின்
நான்காவது அமர்வின்
போதே வடமாகாணசபை உறுப்பினர்
கே.சிவாஜிலிங்கம் இப்பிரேரணையை முன்வைத்தார்.
« PREV
NEXT »

No comments