திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரியாய் பகுதியில் நான்கு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் கடற்படை சிப்பாய் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சிப்பாய் நான்கு வயது சிறுமியை இன்று காலை ஞாயிற்றுக்கிழமை பாலியல் வல்லுறவுக்குட் படுத்தியதாக குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை அரசினர் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட கடற்படை சிப்பாயியை நாளை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பாக குச்சவெளி பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
No comments
Post a Comment