Latest News

December 22, 2013

அரசு சார்பு போலி புலிகள் உருவாக்கப்படுகிறது
by admin - 0

தற்போது இலங்கை அரசின் பிடியில் உள்ள விடுதலைப் புலிகளின் முன் நாள் தளபதி ஒருவரை வைத்து, அவ்வியக்கத்தை இலங்கையில் மீண்டும் ஆரம்பிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமக்கு இது தொடர்பான செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். சர்வோதையா அமைப்பின் ஆண்டு விழாவில் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். புலிகள் இயக்கத்தை வட கிழக்கில் மீண்டும் உருவாக்க இலங்கை அரசே முயற்சிப்பதாகவும், இந்த இரகசிய தகவல் தமக்கு நேற்றைய தினம்(சனிக்கிழமை) தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்த தளபதியை வைத்து இலங்கை அரசு இந்த நாடகத்தை அரங்கேற்றவுள்ளது என்பது தொடர்பாக அவர் எக்கருத்தையும் கூறவில்லை.
« PREV
NEXT »

No comments