Latest News

November 17, 2013

கேமரூனையும் புலியாக்கிய கோத்தபய
by admin - 0

கொழும்பு: விடுதலைப்புலிகளை திருப்திபடுத்தும் விதத்தில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் செயல்படுகிறார் என்று இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேமரூனின் செயற்பாடு, இங்கிலாந்தில் உள்ள உலக தமிழர் பேரவை மற்றும் இங்கிலாந்து தமிழர் பேரவை ஆகியவற்றின் பின்னணியில் இடம்பெற்றதாக கோத்தபய குறிப்பிட்டுள்ளார்.
காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டுக்காக இலங்கை வருவதற்கு முன்னர் இங்கிலாந்து பிரதமரின் குழுவினரை, இங்கிலாந்து தமிழ் குழுக்கள் சந்தித்தை கோத்தபய சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கிலாந்தில் கொன்சவேட்டிவ் மற்றும் ஜனநாயக்கட்சியின் தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு செயற்படுகின்றனர். இதன் ஒரு செயற்பாடே இலங்கையிலும் இடம்பெற்றிருக்கிறது என்றும் கோத்தபய குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றம் தொடர்பில் கேமரூனின் எச்சரிக்கை, இலங்கை இன்னும் இங்கிலாந்து ஆளுகைக்குள் இருப்பதை போன்ற நிலைமையில் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கோத்தபய தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments