Latest News

November 04, 2013

இசைப்பிரியா பற்றிய காணொலி கேள்விக்கணை தொடுக்கும் பிரிட்டன்; இமானுவேல் அடிகளார் நம்பிக்கை
by admin - 0

"இனப்படுகொலை தொடர்பில் இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை - புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் ஓயாது. இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பான வீடியோ, போராட்டங்களை மேலும் கூர்மையாக்கும்.'' இவ்வாறு உலகத் தமிழர் பேரவையில் தலைவர் வண. இமானுவேல் அடிகளார் நேற்று தெரிவித்தார். பொதுநலவாய மாநாட்டில் பிரிட்டனின் பிரசன்னம் மற்றும் சனல் - 4
விடியோ விவகாரம் ஆகியன தொடர்பில் கருத்துவெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது: பொதுநலவாய மாநாட்டில் பிரிட்டன் பிரதிநிதிகள் பங்கேற்பது தொடர்பில் நாம் அவர்களுடன்
பேச்சு நடத்தினோம். கடிதங்களை எழுதினோம். தற்போதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும், தங்களின் பங்குபற்றல் அவசியம் என பிரிட்டன் அதிகாரிகள் கருதுவதால் கொழும்பு மாநாட்டில் அவர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் வைத்து மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையிடம் கேள்வி எழுப்பப்படும் என்று பிரிட்டன் பிரதிநிதிகள் கூறினார்கள். எனவே, இசைப்பிரியா தொடர்பிலும் அவர்கள் கேள்வி தொடுப்பர் என்ற
நம்பிக்கை உள்ளது. அதேவேளை, இனப்படுகொலை சாட்சிகள் தற்போது வெளிவந்த வண்ணமுள்ளன.
இவற்றை மறைப்பதற்கு இலங்கை அரசு முயற்சிக்கின்றது. இவற்றை ஒருபோதும் மறைக்கவும்
முடியாது மறுக்கவும் முடியாது. நாம் மறக்கவும் மாட்டோம். இவ்வாறு உலகத் தமிழர் பேரவையில் தலைவர் வண. இமானுவேல் அடிகளார் நேற்று தெரிவித்தார். பொதுநலவாய மாநாட்டில் பிரிட்டனின் பிரசன்னம் மற்றும் சனல் - 4 விடியோ விவகாரம் ஆகியன தொடர்பில் கருத்துவெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது: பொதுநலவாய மாநாட்டில் பிரிட்டன் பிரதிநிதிகள் பங்கேற்பது தொடர்பில் நாம் அவர்களுடன் பேச்சு நடத்தினோம். கடிதங்களை எழுதினோம். தற்போதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும், தங்களின் பங்குபற்றல் அவசியம் என பிரிட்டன் அதிகாரிகள் கருதுவதால் கொழும்பு மாநாட்டில் அவர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் வைத்து மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையிடம் கேள்வி எழுப்பப்படும் என்று பிரிட்டன் பிரதிநிதிகள் கூறினார்கள். எனவே, இசைப்பிரியா தொடர்பிலும் அவர்கள் கேள்வி தொடுப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. அதேவேளை, இனப்படுகொலை சாட்சிகள் தற்போது வெளிவந்த வண்ணமுள்ளன. இவற்றை மறைப்பதற்கு இலங்கை அரசு முயற்சிக்கின்றது. இவற்றை ஒருபோதும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. நாம் மறக்கவும் மாட்டோம். தொடர்ந்து போராடுவோம். அனைத்துலக விசாரணை மூலம் நீதி கிடைக்கும் வரை ஓயப் போவதில்லை. இதர புலம்பெயர் அமைப்புகளுடன் இது விடயத்தில் எம்முடன் இணைந்துச் செயற்பட வேண்டும் என்றார்.
« PREV
NEXT »

No comments