Latest News

November 30, 2013

பிரபாகரனை கொன்றொழிக்கும் தேவை வெளிநாடுகளுக்கு இருந்தது: சபையில் பஷில்
by admin - 0

தமிழ் மக்கள் தொடர்பில் இன்று முதலைக்கண்ணீர் வடிக்கின்ற வெளிநாடுகள் நினைத்திருந்தால் அன்று யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியும். எனினும் அரசாங்கத்தைப் பாவித்து பிரபாகரனை கொன்றொழிக்கும் தேவை அவர்களுக்கு இருந்தது. இங்கிருப்பது உள்நாட்டின் எமது பிரச்சினையாகும். எனவே அந்நிய தலையீடுகளின்றி நாமே எமது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வோம். இதற்காக தமிழ் மக்களுக்கும் தழிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
 
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்து அழைப்பு விடுத்தார்.
 
அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
 
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வடக்கில் அபிவிருத்திகளை மாத்திரமன்றி ஜனநாயக முறைமைகளையும் உறுதிப்படுத்தியிருக்கின்றது? தேசிய பிரச்சினை ஒன்றினை எதிர்கொண்டுள்ள நாம் அதனைத் தீர்த்துக் கொள்வதற்கு நாமே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 
வெளிநாடுகளில் இருந்த திணிக்கப்படுகின்ற எந்தவொரு தீர்வும் இங்கு பயனுடையதாக அமைந்து விடப் போவதில்லை.
 
இன்று தமிழ் மக்களின் பால் வெளிநாடுகள் சில முதலைக்கண்ணீர் வடிக்கின்றன. எனினும் தமிழ் மக்கள் மீது இவர்களுக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருப்பின் அன்று யுத்தத்தை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்றார்.
« PREV
NEXT »

No comments