Latest News

November 06, 2013

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது !
by admin - 0

 உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் தஞ்சாவூர் விளார் சாலையில், அமைக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இன்று காலை பத்தரை மணியளவில் மொழிப் போர் மறவர் திரு. ம. நடராசன் அவர்கள் தலைமையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த திரு. பழ. நெடுமாறன், முற்றத்தின் திறப்புக்கு பல்வேறு வகைகளில் முட்டுக்கட்டைகள் போட முயன்ற மத்திய அரசையும் அதற்கு துணை நின்ற மாநில அரசையும் கடுமையாக கண்டித்தார். 

அவசரமாக திறக்கப்பட்டுள்ளது.

 என்ன நடந்ததென்றால்..... 

இப்படி ஒரு விழாவே நடத்தக்கூடாது. இப்படி ஒரு நினைவு சின்னமே கூடாது என்பது சோனியா கும்பளின் கனவு, நினைவு. அதன் பேரில் மத்திய உளவு நிறுவனம் ‘நிறைய’ வேலைகளை செய்தது. ஒட்டுகேட்பும் நடந்தது. இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பழ.நெடுமாறன் ஐயா நீதிமன்றத்தை நாடினார். அதன் பேரில் விழாவை நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. கூடவே இதில் மத்திய அரசின் கருத்து என்ன எனவும் கேட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய உளவு நிறுவன உயர் அதிகாரிகள், இங்குள்ள உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும், தலைமை செயலக அதிகாரிகளுக்கும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாயாக சுற்றினார்கள்.
நேற்று உயர்நீதி மன்றம் கொடுத்ததீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்சநீதி மன்றத்திற்கு போகும் முடிவை போலீஸ் எடுத்தது. அதன் பேரில் ‘மேற்கொண்டு எந்த வேலையையும் செய்யாதீர்கள். மேல்முறையீட்டிற்கு போகிறோம்’ என சொல்லாமல் வேறு வேறு காரணங்களை கூறி அங்கு நடக்கும் வேலைகளை நிறுத்த முனைந்தார்கள். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட உள்ள அந்த நிலத்தில் ஒரு பிரச்சனை என்று, வேறு போலி நபர்களின் பேயரில் ஒரு மனுவைகொடுத்து, அதன் மூலம்nதடுத்து நிறுத்தும் வேலை நடத்தது. இன்னும் சிலதை இங்கே சொல்ல முடியாது. நடப்பவை அனைத்தையும் ‘அறிந்து’கொண்டு அதிரடியாக களத்தில் இறங்கினார்கள். பின்னிரவு நேரத்திற்குள்ளாக தகவலை ரகசியமாககொண்டுசென்று, அருகில் இருந்த முக்கிய நபர்களையும், அனைத்துகட்சி நிர்வாகிகளையும் ‘முக்கிய கூட்டம்’ என்ற பெயரில் வரவழைத்துவிட்டார்கள். நேற்று நீதிமன்ற உத்தரவு பெற்ற விஷயமாக இருக்கும் என்று அங்கே சுற்றியிருந்த மத்திய உளவு நிறுவன ஆட்களும், ஒட்டு கேட்புகளும் சாதாரணமாக இருந்துள்ளனர். இப்படியாக....அவசரக்கூட்டம் என்றுகூடி, அங்கேயே விஷயத்தை போட்டுடைத்து பட்டென்று திறப்பு விழா என நடத்தி முடித்துவிட்டார்கள். எல்லாமும் சரி. மத்திய சோனியா அரசுக்கு ஏன்இவ்வளவு வேகம். ஒன்றுமில்லை. இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பதற்கு முன்பாக இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பது சரியில்லை. சர்ச்சையை உருவாக்கும். அதுவரை தடுக்க வேண்டும். அல்லது தாமதப்படுத்த வேண்டும் என சிங்கள அரசு வேண்டிக்கொண்டது. வேண்டுதல் என்ன? மிரட்டியது. அதை சோனியா கும்பல் நிறைவேற்ற பார்த்தது. இதுதான் ரகசிய விளையாட்டு. இப்போதைக்கு இது போதும். மற்றபடி 8,9,10.தேதிகளில் நடக்கும் வழக்கமான நிகழ்ச்சி நடக்கும்...


« PREV
NEXT »

No comments