Latest News

November 27, 2013

பலத்த பாதுகாப்பிலும் யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி
by admin - 0


அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பல்கலை வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவுத்தூபிக்கு மாணவர்களால் சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் பல்கலை வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன்  ஆலயத்தில் மௌனப்பிரார்த்தனை மூலம் மாவீரர்களுக்கான தமது அஞ்சலியை இன்றையதினம் அமைதியான முறையில் செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் ,பொலிஸார்  மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் எமது மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் யாழ்ப்பாணத்தில் பிரத்தியேகமாக பல இடங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







« PREV
NEXT »

No comments