இலங்கை அரசாங்கத்துடன் நல்லுறவைக் கொண்டுள்ள லிகாமொபைல் (Lycamobile) டெலிகொம் நிறுவனத்திடம் இருந்து தமது டொரி கட்சி 420,000 பவுண்ட்ஸ்களை பெற்றமை குறித்து விசாரணை நடத்துமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் உத்தரவிடடுள்ளார்.
லிகாமொபைல் டெலிகொம் நிறுவனம் இலங்கையின் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் நல்ல உறவை கொண்டிருக்கிறது.
லிகாமொபைல் டெலிகொம் நிறுவனம் இலங்கையின் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் நல்ல உறவை கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் தமது கட்சி, குறித்த நிறுவனத்திடம் இருந்து 420,000 பவுண்ட்ஸ்களை பெற்றமை பிரித்தானிய பிரதமர் கமரூனுக்கும் தெரியும் என்று தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொம் பிளென்கின்சொப் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமது உறுப்பினர் ஒருவர் இலங்கைக்கு செல்வதற்கு அண்மையில் தடுக்கப்பட்டமையை அடுத்தே இந்தக் கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
லிகாமொபைல் நிறுவனம் 2001 ஆம் ஆண்டில் இருந்து கெமரொனின் கட்சிக்கு 426,292 பவுண்ட்ஸ்களை வழங்கியுள்ளது.
இந்த நிறுவனமே பொதுநலவாய கொழும்பு மாநாட்டின் போது வர்த்தக அமர்வுகளுக்கு அனுசரணை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment