தனது தாயின் சமாதியைப் பார்க்கப்போனதால்தான் கவிஞர் ஜெயபாலன் இலங்கையில் கைது செய்யப்பட்டதாக தான் நம்புவதாக அவரது மனைவி வாசுகி கூறியுள்ளார்.
அவரது கைதுக்காக இலங்கை அரசாங்கம் வேறு காரணங்களைக் கூறினாலும், தனது வீட்டில் உள்ள தனது தாயின் சமாதியைப் பார்க்க்போனதற்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக தான் நம்புவதாக வாசுகி வலியுறுத்தியுள்ளார்.
அவர்களது வீடு இருக்கும் இடம் பாதுகாப்பு வலயமா? அங்கு செல்வதற்கு மட்டுப்பாடு ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டதற்கு பதிலளித்த நோர்வேயில் உள்ள வாசுகி அவர்கள், மக்களுடைய வீடுகளை அரசாங்கம் ஆக்கிரமித்து, குந்தி இருப்பது வந்து... எங்களுடைய காணிக்குள் நாங்கள் போவது என்ன குறை?'' என்று பதிலளித்தார்.
தன்னுடைய கணவர் இலங்கையில் இனவிரோதத்துக்கு குந்தகமாக எதுவும் அங்கு பேசவில்லை என்றும் வாசுகி கூறினார்.
அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
தனது தாயின் சமாதியைப் பார்க்கப்போனதால்தான் கவிஞர் ஜெயபாலன் கைது செய்யப்பட்டதாக தான் நம்புவதாக அவரது மனைவி வாசுகி கூறியுள்ளார்.
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
No comments
Post a Comment