Latest News

November 10, 2013

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கொமன்வெல்த் மாநாடு! ஹிக்கடுவையில் இன்று தொடங்குகிறது
by admin - 0

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள,
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் காலனிகளாக இருந்து, விடுதலை பெற்ற 54 நாடுகளின் கூட்டமைப்பான கொமன்வெல்த்
அமைப்பின் மாநாடு, இலங்கை அம்பாந்தோட்டை மாவட்டத்தில்
உள்ள ஹிக்கடுவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்குகிறது. இலங்கையில் இனப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது, போர் இல்லாத பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்களில்கூட லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். போர்க்குற்றங்கள் அரங்கேற்றப்பட்டன. சர்வதேச சமூகத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த
சம்பவங்களால், கொமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் நடத்தக்கூடாது என பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பெரும்சர்ச்சையும் உருவானது. அதுமட்டுமின்றி, போர்க்குற்ற விசாரணையை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் முன்னிலையில் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ள ராஜபக்சவின் கரத்தை வலுப்படுத்த உதவும் என கருதப்படுகிற இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என உலகமெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழக அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. பலத்த எதிர்ப்பின் காரணமாக இதில் கலந்து கொள்வது குறித்து முடிவு எடுக்க முடியாமல் பிரதமர் மன்மோகன் சிங் திணறி வருகிறார். இந்த நிலையில் கொமன்வெல்த் மாநாடு திட்டமிட்டபடி இன்று இலங்கை, அம்பாந்தோட்டையில் தொடங்குகிறது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மாநாடு தொடங்குவதை முறைப்படி அறிவிக்க அதைத் தொடர்ந்து ‘9–வது கொமன்வெல்த் இளைஞர் மன்றம்’ என்ற பெயரில் 5 நாள் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த கொமன்வெல்த் இளைஞர் மன்றம்,‘அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வலுவாக ஒன்றிணைவோம்’ என்ற தலைப்பில் அமைகிறது. கொமன்வெல்த் நாடுகளின் இளைய தலைவர்கள் இதில் பங்கேற்று, விவாதிக்கிறார்கள். கொமன்வெல்த் மாநாட்டின் தலைமை விருந்தினராக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பங்கேற்கிறார். அவர் 3 நாள் நிகழ்ச்சிகளில் 15–17 தேதிகள் கலந்து கொள்கிறார். தற்போது இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிற இளவரசர் சார்லஸ்–கமிலா பார்க்கர் தம்பதியர், அதை முடித்துக்கொண்டு இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்வார்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் லண்டன் வாழ் தமிழர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இங்கிலாந்து பிரதமர்
டேவிட் கமரூன் கலந்து கொள்கிறார். ஆனால் அவர் தனது இலங்கை பயணத்தை நியாயப்படுத்தி உள் இது தொடர்பாக அவர், இலங்கையில் நடந்துள்ளதாக கூறப்படும் போர்க்குற்றங்கள், தொடரும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து சுதந்திரமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்துவேன் என கூறி உள்ளார். மேலும், கொமன்வெல்த் மாநாட்டின் போது,உள்நாட்டு போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில், இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் பேணல் ஆகியவற்றில் இன்னும் முன்னேற்றம்
ஏற்படவில்லை என்பதை உலகளாவிய அளவுக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்க இந்த பயணத்தை பயன்படுத்துவேன் எனவும்
அவர் கூறியுள்ளார். இலங்கை கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக முதன் முதலில் கனடா நாடு அறிவித்தது. கனடாவில் கணிசமான அளவுக்கு புலம் பெயர்ந்த ஈழnதமிழர்கள் வசிப்பதால்ெ, அவர்கள் மன உணர்வுக்கு மதிப்பு கொடுத்து கனடா பிரதம ஸ்டீபன் கார்பர் கடந்த மாதமே புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டார் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக, அந்த அமைப்பின் தலைமை செயலாளர் கமலேஷ் சர்மா நேற்று கொழும்பு போய்ச் சேர்ந்தார். இவர் இந்திய முன்னாள் தூதரக
அதிகாரி ஆவார். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களில், அந்த நாட்டு அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி கடும் விமர்சனத்துக்கு ஆளானவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments