Latest News

November 14, 2013

இந்தியாவின் முடிவை மதிக்கிறேன்: கெமரூன்
by admin - 0

இலங்கையில் நடைபெற்றுவரும் பொதுநலவாய மாநாட்டில்
பங்கேற்பது குறித்து இந்தியா எடுத்துள்ள முடிவை தான் மதிப்பதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார். 'கொழும்பில் நடைபெறும் மாநாட்டில் தாம் கலந்துக் கொள்வதன் மூலம் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் சமாதான நடவடிக்கைகளை குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்றும் இதன்
மூலம் சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை ஈர்க்க வாய்ப்பு உள்ளதாகவும்' அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர், இன்று இந்திய பிரதமர் மன்மோகன்
சிங்கை சந்தித்து கலந்துரையாடினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தரர்
போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
« PREV
NEXT »

No comments