Latest News

November 10, 2013

கண்ணீரை வரவழைக்காத வெங்காயம் : அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு -
by admin - 0

வெங்காயம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது கண்ணீர் தான். ஆனால் கண்ணீரை வரவழைக்காத புதிய வகை வெங்காயம் ஒன்றினை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இந்த டியர்லெஸ் (கண்ணீரற்ற) வெங்காயம் கண் எரிவு மற்றும் கண்ணீர் வராமல் தடுப்பது மட்டுமல்லாம் இதயநோய் மற்றும் உடல் அதிகரிப்புக்கு எதிராகவும் செயற்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வெங்காயத்திலுள்ள வேதியியல் பொருட்களே; அதனை வெட்டும்போது அல்லது உரிக்கும் போது  கண்ணீல் நீர் வரக் காரணம். இதனைத் தவிர்த்துவிட்டு வெள்ளைப் பூண்டிலுள்ளது போன்று ஸல்பரினைக்கொண்டு கண்ணீர் வரவழைக்காத வெங்காயம் உருவாக்கப்பட்டுள்ளது.இப்புதிய வகை வெங்காயத்தினை அமெரிக்காவைச் சோந்த கொலின் சீ ஈடி விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments