இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து செங்கோட்டையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளகூடாது என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவ அமைப்புக்கள், பொதுநலஅமைப்புக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டம் செங்கோட்டைதாலுகா அலுவலகம் முன்பு அப்பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுனர் குமார் என்பவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியபடி தீ வைக்க முயன்றார். இதைக் கண்ட அப்பகுதி பூ வியாபாரிகள் அவரை காப்பாற்றிவிட்டு உடனடியாக செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் குமாரை மீட்டு அறிவுரை கூறி செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 25 நிமிடம் பரப்பரப்பு நிலவியது.

No comments
Post a Comment