Latest News

November 05, 2013

தமக்கான வீசாவை வழங்க இந்தியா மறுத்துள்ளமை தொடர்பில் கெலம் மெக்கரே அதிர்ச்சி
by admin - 0

தமக்கான வீசாவை வழங்க இந்தியா மறுத்துள்ளமை தொடர்பில், நோ பயர் சோன் காணொளியின் தயாரிப்பாளர் கெலம் மெக்கரே அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

நாளை மறுதினம் புதுடில்கியில் கெல்லம் மெக்கரேலியின் நோ பயர் சோன் காணொளி காண்பிக்கப்படவுள்ளது. இதில் கலந்துக் கொள்வதற்காக கெல்லம் மெக்கரே இன்றைய தினம் இந்திய செல்வதாக இருந்தது.

எனினும் அவருக்கான வீசாவை வழங்கிய இந்தியா மறுத்துள்ளது. தாம் எட்டு மாதங்களுக்கு முன்னரே இந்தியாவுக்கான வீசாவை கோரி விண்ணப்பித்திருப்பதாகவும், எனினும் தமக்கு இந்திய வீசா வழங்க மறுத்துள்ளமை குறித்து அதிர்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் கொழும்பு அரசாங்க தரப்பில் இறுதியுத்தம் இடம்பெற்ற சில மாதங்களில் பாரிய யுத்தக் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது உறுதியான விடயம்.

இது சம்பந்தமாக ஆதாரங்களை தாம் சமர்ப்பித்துள்ள போதும், இதனை இந்தியா போன்ற நாடுகள் பரிசோதித்து, இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை விடுத்து, இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
« PREV
NEXT »

No comments