Latest News

October 28, 2013

சனல்4 தொலைக்காட்சியில் காணாமல் போன சம்பவங்களை அடிப்படையாக கொண்ட வெள்ளை வான் திரைப்படம்
by admin - 0

இந்தியாவின் சுயாதீன திரைப்பட நெறியாளரான லீனா மணிமேகலை பிரத்தியேக காட்சிகளுடன் கூடிய "வெள்ளை வான்" என்ற விவரண திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
வெள்ளை வான் என்ற இந்த திரைப்படம் இலங்கையில் காணாமல் போக செய்யும் சம்பவங்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விவரணத் திரைப்படம் நவம்பர் மாதம் பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட உள்ளது.

இந்த திரைப்படத்தின் 12 நிமிடங்கள் கொண்ட விசேட தொகுப்பு அமெரிக்காவின் சி.என்.என். மற்றும் அவுஸ்திரேலியாவின் ஏ.பி.சி ஆகிய தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்பட உள்ளது.

கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் உலக தொலைக்காட்சிகள் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைக்க உள்ளன.

இரண்டு மணி நேரம் ஓடக் கூடிய இந்த வெள்ளை வான் திரைப்படத்தை லீனா மணிமேகலை தயாரித்து இயக்கியுள்ளார்.

சகல இனங்களையும் சேர்ந்த மற்றும் மாகாண ரீதியில் போருக்கு பிந்திய இலங்கையில் காணாமல் போன நபர்களின் அன்புகுரியவர்களின் சோகங்களை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

1980 முதல் 1990 வரையில் நடந்த ஜே.வி.பியின் ஆயுத கிளர்ச்சியின் போது காணாமல் போனவர்கள் மற்றும் இலங்கையில் நடைபெற்ற தீவிர உள்நாட்டு போரின் போது காணாமல் போன தமிழ், சிங்கள, முஸ்லிம் அனைத்து இன மக்கள் தொடர்பான விடயங்கள் இந்த திரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.


« PREV
NEXT »

No comments