Latest News

October 22, 2013

தமிழக சட்டசபையில் கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க கோரி தீர்மானம்?
by admin - 0

தமிழக சட்டசபையின்
மழைக்கால கூட்டத் தொடர் நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையில், இக்கூட்டத்
தொடரில் கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம்
நிறைவேற்றப்படக் கூடும் எனத்
தெரிவிக்கப்படுகிறது. தமிழக சட்டசபை நாளை கூடியதும், இலங்கையில் நடைபெற உள்ள கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருவதால் அது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்மெனக் கூறி, எதிர்ப்புக்கள் வலுவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments