Latest News

October 28, 2013

பிரிட்டன் புயலில் இதுவரை இருவர் பலி
by admin - 0

பிரிட்டனை தாக்கிக்கொண்டிருக்கும் புயல் காற்றில் இதுவரை இருவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
கெண்ட் பகுதியில் ஒரு சிறுவனும், வட்ஃபோர்ட்டில் ஒருவரும் புயலில் மரங்கள் வீழ்ந்ததால் கொல்லப்பட்டிருக்கிறாரகள்.

இரண்டு லட்சத்து இருபதினாயிரம் வீடுகள் மின் இணைப்பை இழந்துள்ளன. பிரிட்டனின் தென்பகுதிக்கான ரயில் பாதைகளில் மரங்கள் வீழ்ந்ததால் பல ரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

எதிர்பார்த்ததைவிட சேதம் அதிகம் என்று ரயில் வலையமைப்பு கூறியுள்ளது.

ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து 130 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

ஐல் ஒஃப்வைட்டில் மணிக்கு 99 மைல் வேகத்தில் காற்று வீசியதாக காலநிலை அவதான நிலையம் கூறியுள்ளது.
« PREV
NEXT »

No comments